ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநரை சந்திக்கும் தினகரன்...

செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (20:03 IST)
தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் தமிழக ஆளுநரை அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திக்கவுள்ளார்.


 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுரிடம் மனு கொடுத்தனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சட்டமன்றத்தை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட பல கட்சிகள் கோரிக்கை வைத்தனர். 
 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதன் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனெனில், இப்போதும் அவர்கள் அதிமுக எம்.எல்.ஏக்களாகவே இருக்கிறார்கள். அவர்களை அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கினாலோ, அல்லது அவர்கள் அனைவரும் வேறு கட்சிக்கு சென்றுவிட்டால் மட்டுமே சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். 
 
எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பலம் குறைந்து விட்டதாக கருத முடியாது. அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தற்போது அவசியம் இல்லை. மேலும், ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் இரு குழுக்களாக பிரிந்து செயல்படும்போது அதில் நாங்கள் தலையிட முடியாது” என ஆளுநர் கூறிவிட்டார்.
 
இந்நிலையில், தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் வருகிற 7ம் தேதி ஆளுநர் வித்யாசாகரை தினகரன் சந்திக்கவுள்ளார். அந்த சந்திப்பில், தனது ஆதரவாளர்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் அவர் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்