தினகரனுக்கு ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் 19 பேர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அந்த எண்ணிக்கை உயர்ந்து 22-ஆக உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அவருக்கு இதுவரை 6 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு வேலூர் எம்.பி.செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தினகரனை அதிகரிக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.