நிர்வாக தவறுகளை சுட்டிக்காட்டினாலே கைதா? டிடிவி காட்டம்!!

வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (15:08 IST)
அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் இணையதள பத்திரிகையாளர் கைதிற்கு கண்டனம் தெரிவித்துள்ள்ளார். 
 
கோயம்புத்தூரில் கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தி தரவில்லை என செய்தி வெளியிட்ட இணைய இதழின் பத்திரிக்கையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். 
 
பிறகு அவர்களை விடுதலை செய்த போலீஸார் அந்த இணைய இதழின் பதிப்பாசிரியர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியனை கைது செய்துள்ளனர். இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். இவரை தொடர்ந்து தற்போது அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ள்ளார். 
 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, கொரோனா  தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிகையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
 
அவர் மீதான நடவடிக்கையைக் காவல்துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்