அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்போது, இவர்களுக்கு அமமுக கட்சியில் பதவியும் வழங்கபப்ட்டு உள்ளதால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களில் நிலைபாடு குறித்து அறிய அரசு கொறடா சபாநயகருக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், இன்னும் 3 எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) டிடிவிக்கு ஆகியோர் கட்சியில் பதவி வகித்துக்கொண்டு அதிமுகவில் செயல்பட்டு வருவதால், இது குறித்து விளக்கம் கேட்டு அதிமுக தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதில் தற்போது, அரசு கொறடா இந்த எம்.எல்.ஏ-க்களின் நிலைபாடு குறித்து தெரிந்துக்கொள்ள சபநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது.