காரில் ஓட்டியவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்த போலீஸ்
ஞாயிறு, 3 டிசம்பர் 2017 (18:04 IST)
திருச்சியில் கார் ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து திருச்சி மாநகரம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையினர் திருச்சியை அடுத்துள்ள கல்லனை அருகே வேங்கூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த சகாய ஜெயராஜ் என்பவரிடம் சோதனை செய்துள்ளனர். ஆவணங்கள் அனைத்து சரியாக இருந்துள்ளது.
இருந்தாலும் அவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல்துறையினரின் வாகன சோதனையால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.