அம்மாவிடம் காதலனை அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ருதி ஹாசன்

வெள்ளி, 1 டிசம்பர் 2017 (17:48 IST)
அம்மா சரிகாவிடம் தன் காதலனை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாக இருந்தவர் ஸ்ருதி ஹாசன். அதுமட்டுமல்ல, இசையமைப்பாளராகவும், பின்னணிப் பாடகியாகவும் இருந்தவர். ஆனால், தற்போது எந்தப் பட வாய்ப்பும் இன்றி வெட்டியாக இருக்கிறார். கமல் இயக்கத்தில் உருவாகும் ‘சபாஷ் நாயுடு’ மட்டுமே அவர் கையில் இருக்கிறது.
 
இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் திருமணத்திற்குத் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய காதலரான லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை, தன்னுடைய அம்மா சரிகாவிடம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன். சரிகாவும் மலர்க்கொத்து கொடுத்து அவரை வரவேற்றதாக கூறப்படுகிறது. இந்த போட்டோக்கள்தான் வட இந்திய மீடியாக்களில் வைரலாக உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்