அந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உதவியாளர் பூங்குன்றன், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, அண்ணன் மகள் தீபா, மாதவன், டிரைவர் ஐயப்பன் உள்ளிடோரிடம் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் செல்ல பிள்ளையாக வளர்ந்த இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த மாதம் 13-ந்தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.