சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

புதன், 23 பிப்ரவரி 2022 (06:45 IST)
சென்னையில் கடந்த 110 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
 இன்று 111 வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உக்ரைன் ரஷ்யா போர் பதட்டம் காரணமாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு ஐந்து மாநில தேர்தல் ஒன்றே காரணம் என்றும் ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடன் மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்