268 நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. விரைவில் உயரும் வாய்ப்பு?

திங்கள், 13 பிப்ரவரி 2023 (07:37 IST)
கடந்த 267 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்று 268 வது நாளாகவும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
இந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதை அடுத்து உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணையை கொள்முதல் செய்து வைத்திருந்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்