இது தொடர்பாக சட்டப் பேரவையில், சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில், அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுகொண்டது. இந்த கோரிக்கையை ஏற்றுகொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தவுள்ளார்.
மத்திய அரசின், நலிந்த பொதுபிரிவினருக்கான 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டை ஏற்றுகொள்ளும் மாநிலங்களில், 25 சதவீதம் மருத்துவக் கல்வி இடங்களை அதிகரித்து கொள்ளலாம் என மருத்துவக் கவுன்சில் தெரிவித்த நிலையில், இந்த திட்டத்திற்கு கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு, திமுக பலத்த எதிர்ப்பு தெரிவித்தது எனவும், தமிழகத்தில் உள்ள 69 சதவீத பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை இது பாதிக்கும் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.