ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் மழை பெய்யும் என்று நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு என்றும் மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.