கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 13,000 மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த உத்தரவிட்டது
ஆனால் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது என்பதும் அந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் எனவே இந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டது