இந்த வழக்கில் பேரறிவாளன் 26 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அவரது தந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த ஆகஸ்டு 24ம் தேதி அவருக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. அதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றார்.
இந்நிலையில், பேரறிவாளனை ரத்த சொந்தங்கள் தவிர வேறு யாரும் சந்திப்பதோ, அவரின் வீட்டில் தங்குவதோ கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.