இந்நிலையில், இன்னும் 2 மாதங்களில் அவரும் மாற்றப்படுவார் என குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசு இன்னும் கூட சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். தமிழக காங்கிரஸை ஒற்றுமையுடன் வழிநடத்தி, மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும் வல்லமை படைத்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து காங்கிரஸ் எப்படி செயல்படுகிறதோ, அதுபோல் மக்கள் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் குரல் கொடுக்க வேண்டும் என குஷ்பு தெரிவித்தார்.