அம்பேத்கரின் பிறந்நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குஷ்பூ கலந்துக்கொண்டார். இதன் பின்னர், குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, அம்பேத்கரின் நினைவு நாளுக்கு அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளோம் என தெரிவித்தார். பின்னர் அவர் அருகில் இருந்த சிலர் நினைவு நாள் இல்லை, பிறந்த நாள் என்று கூறியதும், சுதாரித்துக்கொண்டு திருத்திக்கொண்டார்.