தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. ஆனால், தேமுதிகவிற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தேமுதிகவினர் அதிருப்தியிலும் உள்ளனர். இப்போது வரை அந்த கூட்டணியில் உள்ள பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ் மாநிலக் காங்கிரஸோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது த மா கா நிர்வாகிகள், தங்கள் கட்சியின் சின்னமான சைக்கிளைப் பெறுவதற்காக 12 தொகுதிகள் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரையும் கலந்தாலோசித்து சொல்வதாக அதிமுக சார்பில் சொல்லப்பட்டுள்ளதாம். த மா கா 12 தொகுதிகள் கேட்டிருப்பது அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.