தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுக – அமமுக கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அமமுகவை கூட்டணியில் இணைக்க சொல்லி பாஜக வலியுறுத்துவதாக பேசிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அமமுகவை இணைக்க சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருந்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி “அமமுகவை கூட்டணியில் இணைப்பது குறித்து அதிமுகவே முடிவெடுக்கும். சசிகலா, தினகரனுடைய பலம், பலவீனம் அதிமுக அறியும்” என கூறியுள்ளார்.