மெரினாவில் நடக்கவுள்ள 75 - வது சுதந்திர தினவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி !
புதன், 3 ஆகஸ்ட் 2022 (17:58 IST)
மெரினாவில் நடக்கவுள்ள 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆம் ஆண்டு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நாட்டில் அனைவரும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில் உள்ள டிபியில் தேசிய கொடிகை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி என்ற திட்டத்தின் கீழ் இம்மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும்படி மத்திய அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், கொரொனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக மெரினாவில் நடந்த சுதந்திர தின் விழாவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம்தேதி மெரினாவில் நடக்கவுள்ள 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.