இந்நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பப்படிவம் வாங்கி வருவதாக சென்றனர் திரும்ப வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும்வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரம், வங்கி லாக்கர் சாவி அதன் ரகசிய நம்பர் மற்றும் பல லட்ச ரூபாய் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு ஜெயக்குமாரி அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து ஜெயக்குமாரி பளுகல் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் அதன் பின்னர் விசாரணையை துரிதப்படுத்தினர். அந்த விசாரணையில் ஸ்ரீநயா பனச்சமூடு பகுதியை சேர்ந்த ஷாலு(23) என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. ஸ்ரீநயா, ஷாலுவுடன் சேர்ந்து சென்றிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகித்தனர்.