இந்த அறிவிப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியபோது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்குப் புறம்பானது என்றும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்றும் அறிவித்துள்ளார்