கரூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற தீமிதி விழா

புதன், 27 மார்ச் 2019 (20:56 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

15நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 24 ந்தேதி காவேரி ஆற்றுக்கு சென்று பால்குடம் தீர்த்தகுடம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நாளான இன்று காலை மாவிளக்கு பூஜை அக்னிசட்டி எடுத்தல் பக்தர்களின் நேர்த்தி கடன் செலுத்துதல் நடந்தது.,  இரவு 7 மணியளவில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூக்குழி இறங்கும் பக்தர்கள் ஓம் சக்தி….ஓம் சக்தி… என கூறிக்கொண்டு பூக்குழி இறங்கி சென்றனர். இதனை காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்