கரூர்: அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா பிராமண சபையோர்களின் மண்டகபடி மற்றும் கைலாய வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி திரு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயமானது, தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் சிவதலங்களில் மிகவும் புராதாணமிக்கதாகும், மேலும், இந்த ஆலயத்தில் அலங்காரவள்ளி, செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ ஆநிலையப்பர் என்றழைக்கப்படும், அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழா  நிகழ்ச்சியானது மிகவும் விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
 
இந்நிகழ்ச்சியினை தினந்தோறும் வாகன வீதி உலா மற்றும் அம்பாள் மற்றும் சுவாமிகள் திருவீதி உலாவும் நடைபெற்று வரும் நிலையில், 5-ம் நாள் கட்டளையாக, கரூர் விஸ்வகர்மா பிராமணர் சபையினரால், கைலாய வாகனத்தில் சுவாமியும், அம்பாள்களும் எழுந்தருளி அருள் புரிந்தனர். முன்னதாக உற்சவருக்கு சோடச தீபாராதனைகளை தொடர்ந்து மஹா தீபாராதனையும் நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில்,. சுவாமி பல்வேறு வண்ண அலங்காரங்கள் செய்து., மின்னொளியில் அம்பாள்களுடன் காட்சியளித்து கரூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இதனை தொடர்ந்து விஸ்வகர்மா பிராமண சபையினரால்  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை விஸ்வகர்மா பிராமண சபையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்