தமிழகத்தில் முதல்முறையாக பக்தர்கள் இன்றி தைப்பூசம்!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (07:47 IST)
தமிழகத்தில் முதல் முறையாக மற்றும் முருகன் கோயில்களில் பக்தர்கள் இன்றி தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று தைப்பூச நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக  தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது
 
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, உள்பட அறுபடை வீடுகளிலும் வடலூர் வள்ளலார் கோவில் உள்பட பல இடங்களில் இன்று தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்  காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவிலில் முதல்முறையாக பக்தர்கள் இன்றி மிக எளிமையாக தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருகிறது
 
மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சி, தேரோட்டம் ஆகியவையும் பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு இருப்பதால் பக்தர்கள் அதில் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்