சாமியானா பந்தல், மைக்செட்: சென்னை டாஸ்மாக் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள்!

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (13:46 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் தற்போது சென்னையில் நாளை டாஸ்மாக் மது கடைகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி டாஸ்மாக் கடைகள் முன் சாமியானா பந்தல் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் வாடிக்கையாளர்கள் 3 அடி இடைவெளி விட்டு நிற்க ஏதுவாக 50 வட்டங்கள் வரைய வேண்டும் என்றும் டாஸ்மாக் மதுபான கடைகளில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக வழிகாட்டு நெறிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து டாஸ்மாக் கடையை நிர்வாகமும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்