ஆந்திர வங்கியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

செவ்வாய், 14 மார்ச் 2017 (18:45 IST)
கரூரில் உள்ள பழைய பைபாஸ் ரோட்டில் உள்ள ஆந்திர வங்கியை இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் ஆந்திர அரசை கண்டித்தும், அப்பாவி தமிழர்கள் கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்தும் வங்கியை முற்றுகையிட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆந்திர அரசு, அப்பாவி தமிழர்களை போலி என்கவுண்டர் செய்தும் இன்றும் அவர்களது கொலை வன்மம் தொடர்வதாகவும், மேலும் 216 அப்பாவி தமிழர்கள் செம்மரம் கடத்தியதாக கூறி கைது செய்துள்ளனர்.



இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் ஆந்திர அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் முதல்கட்டமாக கரூரில் இயங்கும் ஆந்திர வங்கியை முற்றுகையிடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் முற்றுகையில் ஈடுபட்ட பெண் நிர்வாகிகள் மற்றும் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இதே போல் ஆந்திர அரசு அடாவடி செயலில் ஈடுபட்டால் ஆந்திர நிறுவனங்களை எங்களது இளம்புயல் அறிவுரையின் பேரில் ஆங்காங்கே முற்றுகையிட்டு சிறைபிடித்து மாபெரும் ஆர்பாட்டம் விரைவில் நடத்துவோம் என்றும் மாவட்ட செயலாளர் ந.சத்தியமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

மேலும் இந்த முற்றுகை போராட்டத்தில் மாவட்ட மகளிரணி தலைவி மகேஸ்வரி, நகர மகளிரணி தலைவி விமலா, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் இளமாறன் உள்ளிட்ட முக்கியப்பிரமுகர்களும் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
 
-சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்