தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த் தகவல் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு ஆண்டுக்கு 812 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. ஆனால் வருமானமாக 287 கோடி ரூபாய்தான் கிடைக்கிறது. இதில் நஷ்டமாகும் 525 கோடி ரூபாயை தமிழக அரசுதான் ஏற்றுக்கொள்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்க்கையில் 6 ஆண்டுகளில் சுமார் 3000 கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசு மெட்ரோ நிர்வாகத்துக்கு வழங்கி வந்துள்ளது.