பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, உண்மையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய பங்கு வகிப்பது மத்திய அரசின் வரைவு திட்டம்தான்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு நிச்சயம் தண்ணீர் வரும். இதன் வெற்றி கூட்டம் பாஜக சார்பாக 40 இடங்களில் நடைபெற உள்ளது. கருணாநிதியின் பிறந்தநாள் விழா, காவிரி மீட்டெடுத்த வெற்றி கொண்டாட்டமாக கொண்டாடுவதாக ஸ்டாலின் கூறியுள்ளது தவறானது.
திமுகவின் தோல்விதான் இன்று வெளிப்படையாக காவிரியில் வெற்றியாக வந்துள்ளது. கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்பில் திமுக கலந்துகொள்வது தவறு இல்லை. தமிழ் உணர்வும் தமிழ்நாடு பற்றும் திமுகவிற்கு இல்லை. எதுக்கெடுத்தாலும் கருப்பு சட்டை போடும் ஸ்டாலின், குமாரசாமி பதவி ஏற்பில் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொள்வார்களா? என கேட்டுள்ளார்.