கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக,போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.