அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய கேரளா அரசு, தற்போது சிலந்தி ஆற்றைத் தடுத்து தடுப்பணை கட்டி வருகின்றது. இதனால் அமராவதி அணையின் நீர் வரத்து கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் இரண்டு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடும் விவசாய நிலங்கள் மற்றும் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் நிலங்களும் பயன் பெற்று வருகிறது. கேரளா அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் நெல் சாகுபடிக்கே தண்ணீர் கிடைக்காது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.