இளைஞர்கள் படித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.. அஜித் ரசிகர் மரணம் குறித்து டிஜிபி பேட்டி

வியாழன், 12 ஜனவரி 2023 (13:26 IST)
நேற்று அஜீத் நடித்த துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் நேற்று சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் அந்த வழியாக சென்ற கண்டனர் மிது ஏறி டான்ஸ் ஆடிய நிலையில் தவறி கீழே விழுந்ததால் மரணமடைந்தார் 
 
இதனால் அவரது பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக டிஜேபி சைலேந்திரபாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார் 
திரைப்படங்கள் வெளியாகும் போது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது என்றும் பொறுப்போடு இருக்க வேண்டிய இளைஞர்கள் படித்து நல்ல வேலைக்கு சென்று பொறுப்போடு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
சினிமா திரைப்படங்கள் வெளியாகும் போது ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அதனால் ஒரு குடும்பமே பாதிக்கப்படும் என்றும் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்