மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல - கமல்ஹாசன்

சனி, 13 மார்ச் 2021 (23:20 IST)
அரசுகளே, எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல  எனக் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
நேற்று மத்திய அரசு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதில்,மருத்துவப் படிப்பைப் போன்று 2021 ஆம் ஆண்டு முதல் பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கு இனி நீட் தேர்வு கட்டாயம் எனவும் அதேபோல் சித்தா , ஆயுர்வேதம், யுனானி , ஹோமியோபதி போன்ற மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்று ஆணி அறைகிறது மத்திய அரசு. அதற்கும் தலையாட்டும் மாநில அரசு. எல்லாவற்றையும் விற்பவர்கள், தொடர்ந்து கல்வியையும் கடை விரிக்கிறீர்களே… அரசுகளே, எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல எனத் தெரிவித்துள்ளார்.
 

நர்சிங், லைஃப் சயின்ஸ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்று ஆணி அறைகிறது மத்திய அரசு. அதற்கும் தலையாட்டும் மாநில அரசு. எல்லாவற்றையும் விற்பவர்கள், தொடர்ந்து கல்வியையும் கடை விரிக்கிறீர்களே… அரசுகளே, எங்கள் மாணவர்களின் எதிர்காலம் விற்பனைக்கல்ல.

— Kamal Haasan (@ikamalhaasan) March 13, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்