மாணவி அன்பு கள்ளக்குறிச்சி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவருடன் படித்துவந்த தோழிக்கும் அதே பகுதியை சேர்ந்த தீனா என்ற இளைஞருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதற்கு அன்புவின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் பள்ளி சென்ற தனது மகள் வீடு திரும்பாததை அறிந்ததும் காணாமல் போன மாணவியின் பெற்றோர் பள்ளியில் சென்று விசாரிக்கும்போது, அந்த மாணவி அன்புடன் பாதியிலே வெளியே சென்றதாக கூறினர். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் அன்புவின் வீட்டுக்கு வந்து தனது மகள் எங்கே என்று உண்மையைச் சொல்லாவிட்டால் போலீசில் புகார் செய்யவுள்ளதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அன்பு, பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது