பேராசிரியர்களின் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை... கேரள முதல்வர் இ.பி.எஸ்க்கு கடிதம் !
புதன், 13 நவம்பர் 2019 (16:25 IST)
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்திப், வளாக விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், ஃபாத்திமாவின் தந்தை, கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,பேராசிரியரின் துன்புறுத்தலின் பேரில் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகப் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாணவியின் தந்தை எழுதிய கடிதத்தைம் தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பி வைத்தார் பினராயி விஜயன்.
இதையடுத்து சென்னை கோட்டூர்புரம் போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.தற்போது மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீஸார் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,மாணவி தற்கொலை தொடர்பாக 4 பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் கோட்டூர்புரம் போலீஸர் விசாரித்துவருகின்றனர்.