சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, கோவை, நெல்லை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 260 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்றும் நாளை 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய நகரங்களுக்கு இன்றும் நாளையும் 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் திருப்பூர் கோவை பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் 200 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், போக்குவரத்து துறையின் மொபைல் செயலின் மூலம் பயணிகள் தங்கள் டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது