இவர்களிடம் இருந்து தப்பிய ஏழு திருங்கைகள் காஞ்சிபுரம், குருவி மலைப் பகுதியில் இருக்கும் திருநங்கை நகரில் தஞ்சம் புகுந்தனர். இதை எப்படியோ கண்டுபிடித்த மகாலட்சுமி அந்த பகுதிக்கு ரவுடிகளுடன் சென்றுள்ளார்.
தப்பி வந்த திருநங்கைகளை மட்டுமின்றி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மற்றுமொரு திருநங்கையயும் அரிவாள் வைத்து மிரட்டி, அங்கிருக்கும் மரத்தின் கிளைகள் வெட்டி, உங்களையும் இதே போல் வெட்டிவிடுவேன் எனவும் மிரட்டி அவர்களை காரில் கடத்தி சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருக்கும் வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து போலீஸார் கடத்தப்பட்டவர்களை மீட்கவும், கடத்தியவர்களை கைது செய்யவும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.