சென்னை வரலாற்றில் நேற்றுதான் உச்சக்கட்டம்: வெயில் அல்ல இது வேற....

வியாழன், 20 ஜூன் 2019 (07:41 IST)
சென்னையின் வரலாற்றில் வெயில் கொளுத்தி வருவது தெரிந்ததே. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டிருப்பதும், வெப்பத்தின் நிலை புதிய உச்சத்தை தொட்டு வருவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது
 
இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக சென்னையில் மட்டும் நேற்று அதிகபட்சமான மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சென்னை நகரில் மட்டும் நேற்று 3,738 மெகா வாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னை வரலாற்றில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது நேற்று தான் என்று மின்சார துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
வெயிலின் தாக்கம், வெட்கை, காற்றில் ஈரப்பதம் இல்லாமை ஆகிய காரணங்களால் சென்னையில் இரவு முழுவதும் அதிக புழுக்கம் ஏற்படுகிறது. எனவே ஏசி உள்ளிட்ட மின் சாதனங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளதால் மின்சாரத்தின் தேவையும் அதிகமாகியுள்ளது. இப்படியே போனால் தண்ணீர் பற்றாக்குறை மட்டுமின்றி மின்சார பற்றாக்குறையும் ஏற்படும் சூழல் சென்னைக்கு உள்ளது.
 
இது தொடர்கதை ஆனால் சென்னை நகரம் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாகிவிடுமோ என்ற அச்சம் பலர் மனதில் தோன்றியுள்ளது. முறையான மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பது, சுற்றுச்சூழலை கெடாமல் பார்த்து கொள்வது ஆகியவை சென்னை மக்களின் கடமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்