முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் முழுவதிலும் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. இதில், நாள்தோறும் ஏழை, எளியமக்கள் குறைந்த விலையில் சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அதிகப்பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், அமைச்சர் சக்கரபாணி 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்டு அவர் கூறியுள்ளதாவது: அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாகவும் , அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.