உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது: அண்ணாமலை குறித்து செல்லூர் ராஜூ..!

வியாழன், 9 மார்ச் 2023 (12:42 IST)
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அண்ணாமலை குறித்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை தான் ஜெயலலிதா, கருணாநிதி போல் ஒரு கட்சியின் தலைவர் என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுகவின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். 
 
ஜெயலலிதா ஈடு இணை இல்லாத தலைவர் என்றும் அவருக்கு இணையாக அண்ணாமலை தன்னை கூறிக்கொள்வது அர்த்தமற்றது என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இது குறித்து கூறிய போது ஊர் குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது என்றும் அதேபோல் எவனாலும் ஜெயலலிதா போல் ஆக முடியாது என்றும் சிலர் 3 பட்டம் வாங்கி விட்டால் தன்னை பெரிய ஆள் என நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்து கூறினார். 
 
மேலும் அண்ணாமலைக்கு வாய் அடக்கம் தேவை என்றும் ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் இணைவது என்பது இயல்பானது என்றும் பாஜகவினருக்கு அதை ஏற்க ஜீரண சக்தி இல்லை என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்