இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து நிற்க, மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் “அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் கூட அரசியல் கட்சி தொடங்க பயப்பட வேண்டும்” என பேசினார்.
இந்நிலையில் சீமான், விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும் என சீமான் பேசியுள்ளார்.