இது சம்மந்தமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்கள் மீது சாதிவெறி கொண்டு தொடுக்கப்பட்ட கோரத்தாக்குதலைம், வன்முறை வெறியாட்டத்தையும் கேள்வியுற்று பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
பொதுப்பாதையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் பிணத்தை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர்களது உடைமைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் கொடும் தாக்குதல் தொடுத்திருக்கும் சாதிவெறியர்களின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. சாதி எனும் மனநோய் பிடித்து, சகமனிதரைத் தாழ்த்தி, ஒடுக்கி, அடக்கி ஆள முற்படுவதும், அவர்களது உரிமைகளை மறுத்து, உடைமைகளைப் பறித்து சுகம் காணுவதுமான கொடுங்கோல் போக்குகள் மானுடத்திற்கே விரோதமான ஈவிரக்கமற்ற பெரும் அநீதியாகும்.
சாதி ஆதிக்கத்தையும், அதன்மூலம் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைத் தாக்குதல்களையும் எதன் பொருட்டும் ஏற்க முடியாது. இருபத்திவோராம் நூற்றாண்டிலும் சாதிவெறிப் பிடித்து, பொதுவீதியில் நடக்கவும், பிணத்தை பொதுப்பாதை வழியாக எடுத்துச்சென்று அடக்கச்செய்யவுமென சம உரிமையும், சமத்துவமும் கேட்டுப்போராட வேண்டிய இழிநிலை உருவாகியிருப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது. சாதி ஆதிக்கத்தையும், அதன்மூலம் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைத் தாக்குதல்களையும் எதன் பொருட்டும் ஏற்க முடியாது. இருபத்திவோராம் நூற்றாண்டிலும் சாதிவெறிப் பிடித்து, பொதுவீதியில் நடக்கவும், பிணத்தை பொதுப்பாதை வழியாக எடுத்துச்சென்று அடக்கச்செய்யவுமென சம உரிமையும், சமத்துவமும் கேட்டுப்போராட வேண்டிய இழிநிலை உருவாகியிருப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.
ஆகவே, வீரலூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்தி, உரிமைகளை மறுத்த சாதிவெறியர்களைக் கடும் சட்ட நடவடிக்கைள் மூலம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியையும், சமத்துவத்தையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.