இதில் டில்லி ராணியின் வலது கை பகுதியில் இரண்டு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் டில்லி ராணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப தகராறில் டில்லிராணியை அவரது கணவரே தாக்கியதாக கூறப்படும் நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக டில்லிராணி பிரிந்து வாழும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.