கனமழை எதிரொலி: 3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
வியாழன், 2 பிப்ரவரி 2023 (07:50 IST)
கனமழை காரணமாக மயிலாடுதுறையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்க கடலில் ஏற்பட்ட காட்டெழுத்து தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை அடுத்து கனமழை காரணமாக திருவாரூர், மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டும் விடுமுறை என்றும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு கரையை கடந்து வருவதாகவும் இதனால் கடலோர பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.