சசிகலாவுக்கு சிறையில் காத்திருக்கும் அதிர்ச்சி: ஆப்பு வைத்த மனித உரிமை ஆணையம்!

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (17:18 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா 5 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். இவர் மீண்டும் சிறைக்கு செல்லும் போது கர்நாடக சிறையில் அவருக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது.


 
 
சசிகலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு பல்வேறு வசதிகள் அங்கு செய்து கொடுக்கப்பட்டதாகவும், இதற்காக சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் அப்போதையை சிறைத்துறை டிஐஜி ரூபா பகீர் குற்றச்சாட்டை வைத்தார்.
 
இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க சசிகலா பெங்களூர் சிறையில் வசதிகளை அனுபவித்ததை பார்த்த அங்குள்ள சில சிறை கைதிகள் தான் காரணம் என கூறப்பட்டது. அவர்கள் தான் சசிகலா அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல் அளித்தனர்.
 
இதனையடுத்து அந்த சிறை கைதிகளை ரவுடிகளை வைத்து தாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இது தொடர்பாக மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் சிறையில் கைதிகள் தாக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
 
இதனையடுத்து மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக மாநில அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. இந்நிலையில் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு வரும் சசிகலாவுக்கு சிறையில் அதிர்ச்சி காத்திருப்பதாகவும், முன்பு போல அவருக்கு இன்னும் வசதிகள் இருக்காது எனவும், சிறைக்காலம் முழுவதும் அவர் சாதாரண கைதி போல எந்த வசதிகளும் இல்லாமல் தான் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்