சென்னையில் போட்டோ ஷூட் நடத்திய சசிகலா - வைரல் புகைப்படம்

செவ்வாய், 10 ஜனவரி 2017 (12:51 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை வைத்து, அதிமுகவினர் ஒரு புகைப்பட படப்பிடிப்பு ஒன்றை சமீபத்தில் செய்துள்ளார்கள். அதில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


 

 
33 வருடங்களாக திரைமறைவு அரசியல் நடத்தி வந்த சசிகலா, ஜெ.வின் மறைவிற்கு பின், அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், எப்படியாவது அவரை முதலமைச்சர் பதவியில் அமர வைக்க வேண்டும் என அவரின் குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் இந்தியா டுடே பத்திரிக்கை சென்னை, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் நடத்திய கான்க்ளேவ் விவாத கருத்தரங்க மாநாட்டை சசிகலா கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அதன்பின் இந்தியா டுடே நிருபர் கேட்ட சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். 
 
இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று, அதே ஹோட்டலில் சசிகலாவை வைத்து ஒரு புகைப்பட படப்பிடிப்பு நடந்தது என்பது.
 
அதில் சசிகலா பல்வேறு கோணத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளாராம். அந்த புகைப்படங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் தயாரிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் கட்-அவுட், பேனர்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்