2026 தான் எனக்கும் இலக்கு.. 6 மாதங்களுக்கு முன்பே நான் சொல்லிவிட்டேன்! சரத்குமார்!

Mahendran

வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (18:31 IST)
நடிகர் விஜய் இன்று அரசியல் கட்சி ஆரம்பித்து 2026 தான் எனது இலக்கு என்றும் 2024 தேர்தலில் போட்டியிடவில்லை என்றும்  எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ  மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் 2026 தான் எனது இலக்கும் என்றும் நான் இதை ஆறு மாதங்களுக்கு முன்பே சொல்லிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்றும் 2026 தான் எங்கள் இலக்கு என நான் ஆறு மாதங்களுக்கு முன்பே தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் என் உழைப்பு வெளியில் தெரியும் காலம் கனிந்து கொண்டிருக்கிறது என்றும் ஒருநாள் நான் எங்கு சென்று உட்கார வேண்டுமோ அங்கு உட்காருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்