விஜய் விபூதி பூசினா பிடிக்கும்.. சிலுவை போட்டா..! – களமிறங்கிய எஸ்.வி.சேகர்

செவ்வாய், 22 அக்டோபர் 2019 (12:48 IST)
விஜய் நடித்து வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்தில் அவர் கிறிஸ்தவராக நடித்துள்ளது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் விஜய்க்கு ஆதரவி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அதிகமாக பார்க்கப்பட்ட ட்ரெய்லராக சாதனை படைத்தது.

இந்நிலையில் அந்த படத்தில் விஜய் கதாப்பாத்திரம் ராயப்பன், மைக்கெல் என்ற கிறிஸ்தவபெயர்களில் வருவதை குறிப்பிட்ட சிலர் அது குறித்து பலவாறாக விமர்சித்தார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும், தமிழக பாஜக பிரபலமுமான எஸ்.வி.சேகர் “விஜய் விபூதி பூசி நடிச்சா பிடிக்கும். சிலுவை அணிந்தால் பிடிக்காதா? அவர் எங்காவது வெளியே தன் மதத்தை தூக்கி பிடித்து பேசி பார்த்திருக்கிறீர்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

விஜய்க்கு ஆதரவாக எஸ்.வி.சேகர் பேசியுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சக நடிகராக விஜய் மீது மதரீதியாக அவதூறு பரப்புபவர்களையே எஸ்.வி.சேகர் கேள்வி கேட்டுள்ளார். இதில் அரசியல் உள்ளீடு எதுவும் இல்லை என்று விஜய் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

விஜய் வீபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா. Unity in diversity. WE CELEBRATE THIS.

— S.VE.SHEKHER

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்