மெர்சல் படம் ; வாயை விட்ட எஸ்.வி.சேகர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

வெள்ளி, 20 அக்டோபர் 2017 (15:01 IST)
மெர்சல் படம் பற்றி கருத்து தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் நடிகர் எஸ்.வி.சேகர்.


 

 
அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் மெர்சல். இப்படத்தின் சில காட்சிகள் அபூர்வ சகோதரர்கள், கஜினி, ரமணா, சாமுராய் உள்ளிட்ட படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
அதேபோல், படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. எனவே, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “இந்த ஆண்டின் சிறந்த COPY & PASTE  நிபுணர் யாரு?” என கிண்டலடித்து ஒரு டிவிட் செய்துள்ளார்.
 
இதனைக் கண்டு கொதிப்படைந்த விஜய் ரசிகர்களும், நெட்டிசன்களும் அவரை திட்டித் தீர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்