திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை இரும்பு தடுப்பு உடைந்து உள்ள நிலையில், விபத்து ஏற்படுவதற்கு 100% வாய்ப்புகள் உள்ளதால் ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இதனை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
உடைந்த சாலை தடுப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பராமரிப்பு செய்யும் நிர்வாகம் யாரும் இதனை கண்டு கொள்ளாமல் சரி செய்யவில்லை. அதனால் பகல் மற்றும் இரவு வேலைகளில் சாலை தடுப்புகள் இல்லாததால் வாகனங்கள் முந்தி செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டால் அதிக உயிர் சேதம் ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.