மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் பேனர்கள், கொடிகள், செல்போன்கள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
குடிக்க தண்ணீர் கூட கொண்டு வரக்கூடாது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், அவர்களின் அடக்குமுறைக்கு அடிபணிந்து கிரிக்கெட்டை பார்க்கப் போறியா?, இல்ல நீ நினைக்கும் கருத்தை வெளிப்படையாக, சுதந்திரமாக சொல்ல முடியலன்னு இந்த விளையாட்ட தவிர்க்கப் போறியா? இல்ல தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.