நெல்லை டவுன் காட்சி மண்டபம், தடிவீரன் கோவில் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும், இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீசார் குற்றவாளிகளை தேடி வருவதாகவும், நிலத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.